'சூப்பர்ஸ்டார்' தொடங்கி சூர்யா வரை.. 'கீர்த்தனா'வை வாழ்த்தக் குவிந்த நட்சத்திரங்கள்!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
List of celebrities who attended Keerthana Parthiepan's wedding Tamil cinema news

கீர்த்தனா பார்த்திபன்-அக்ஷய் அக்கினேனி திருமணம், சென்னையின் மிகப்பெரிய திருமண அரங்கத்தில் விமரிசையாக இன்று நடைபெற்றது.

 

இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்துள்ள கீர்த்தனா-அக்ஷய் இருவரையும் நடிகர்கள் ரஜினி, கமல்ஹாசன், சரத்குமார், விஜயகுமார், சத்யராஜ், பிரபு,பாக்யராஜ், சூர்யா, விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, சிபிராஜ், சாந்தனு ஆகியோர் நேரில் சென்று வாழ்த்தியுள்ளனர்.

 

நடிகைகளில் குஷ்பூ, ஸ்ரீபிரியா, சுஹாசினி, ராதிகா, சுகன்யா, ரோகிணி, மீனா, ஜோதிகா, பார்வதி நாயர் ஆகியோர் மணமக்களை நேரில் சென்று வாழ்த்தியுள்ளனர்.

 

இயக்குநர்கள் மணிரத்னம், வசந்த், பாலா, கவுதம் மேனன், அமீர், மிஷ்கின், சுந்தர்.சி, சுசீந்திரன், அறிவழகன், பாலாஜி தரணிதரன், விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பலரும், மணமக்களை மனதார நேரில் சென்று வாழ்த்தியுள்ளனர்.

 

இதுதவிர 'இசைஞானி' இளையராஜா மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோரும், கீர்த்தனா-அக்ஷய் இருவரையும் நேரில் சென்று வாழ்த்தியுள்ளனர்.

இல்லற வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்த 'கீர்த்தனா பார்த்திபன்'

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Keerthana Weds Akshay Akkineni

கீர்த்தனா பார்த்திபன்-அக்ஷய் அக்கினேனி இருவருக்கும் மகளிர் தினமான இன்று திருமணம் நடைபெறவுள்ளதாக, நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.

 

இந்தநிலையில், கீர்த்தனா-அக்ஷய் திருமணம் சென்னையின் மிகப்பெரிய திருமண அரங்கத்தில் விமரிசையாக இன்று நடைபெற்றது. இதில் பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

 

மண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்துள்ள கீர்த்தனா-அக்ஷய் இருவரையும், பிஹைண்ட்வுட்ஸ் சார்பாக மனதார வாழ்த்துகிறோம்...