'ஒன்ஸ்மோர்' தயாரிப்பாளர், பழம்பெரும் 'இயக்குநர்' சி.வி.ராஜேந்திரன் காலமானார்!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Director CV Rajendran passed away tamil cinema news

பழம்பெரும் இயக்குநர் சி.வி.ராஜேந்திரன்(81) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று(1.4.18) காலமானார்.

 

முத்துராமன் நடித்த 'அனுபவம் புதுமை' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆன, ராஜேந்திரன் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களை இயக்கியுள்ளார்.

 

இதுதவிர சிவாஜி-விஜய் நடிப்பில் வெளியான 'ஒன்ஸ்மோர்', பிரபுவின் 'வியட்நாம் காலனி' ஆகிய படங்களையும் இவர் தயாரித்துள்ளார்.

 

மறைந்த சி.வி.ராஜேந்திரனின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக, தி.நகரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.