இந்த இயக்குநர் படத்தில் மீண்டும் இணையும் அரவிந்த் சுவாமி

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

இயக்குநர் மணிரத்னத்தின் தளபதி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் அரவிந்த் சுவாமி. அதனைத் தொடர்ந்து ரோஜா, பம்பாய், மின்சாரக் கனவு உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்துவந்தார்.

Aravind Swami again join with Sathuranga vettai 2 director Nirmal kumar

ஒரு கட்டத்தில் திரையுலகைவிட்டு ஒதுங்கிய அரவிந்த் சுவாமி, மீண்டும் மணிரத்னத்தின் கடல் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் சித்தார்த் அபிமன்யூ என்ற வேடத்தில் மிரட்டலான வில்லனாக தோன்றினார்.

பின்னர் போகன், பாஸ்கர் ஒரு ராஸ்கல், செக்க சிவந்த வானம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவரது நடிப்பில் நிர்மல்குமார் சதுரங்க வேட்டை 2 இன்னும் வெளிவராமல் இருக்கிறது.

இந்நிலையில் மீண்டும் சதுரங்கவேட்டை 2 படத்தின் இயக்குநர் நிர்மல்குமாருடன் ஒரு படத்தில் அரவிந்த் சுவாமி இணையவுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் மார்ச் 20 முதல் நடைபெறவிருக்கிறது. 

இந்த படத்தின் கதாநாயகி மற்றும் இசையமைப்பாளர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்த படத்தில் இரண்டு விதமான கெட்டப்புகளில் அரவிந்த் சுவாமி நடிக்கவிருக்கிறார்.