அனுஷ்கா படத்தில் நடிக்கும் ஹாலிவுட் நடிகர் இவரா?

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

‘பாகமதி’ திரைப்படத்திற்கு பிறகு அனுஷ்கா ஷெட்டி நடிக்கவிருக்கும் ஹாரர் த்ரில்லர் திரைப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

A HOLLYWOOD STAR LIKELY A PART OF THIS BAAHUBALI STAR'S NEXT!

ஹேமந்த் மாதுக்கர் இயக்கத்தில் அனுஷ்கா நடிக்கவிருக்கும் ‘சைலன்ஸ்’ என்ற படத்தில் நடிக்க ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேட்சனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

ஹாலிவுட் இயக்குநர் குயெண்டின் டாரண்டினோவின் ‘கில் பில்’, ‘ஒன்ஸ் அப்பான் எ டைம்’ போன்ற திரைப்படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகர் மைக்கேல் மேட்சன். அனுஷ்கா நடிக்கும் ‘சைலன்ஸ்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மைக்கேலுக்கு ரூ.3 கோடி வரை சம்பளம் பேசியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படத்தில் நடிக்க மைக்கேல் ஆர்வமாக இருப்பதாகவும், விரைவில் அவர் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தில் அனுஷ்காவுக்கு ஜோடியாக மாதவன் நடிக்கிறார்.மேலும், அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுப்பா ராஜு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

கோனா வெங்கட் மற்றும் பீப்பிள் மீடியா ஃபேக்டரி சார்பாக டி.ஜி.விஸ்வபிரசாத் ஆகியோர் இணைந்து தயாரிக்கவுள்ளனர். தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் உருவாக்விருக்கும் இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் வரும் மார்ச் மாதம் முதல் அமெரிக்காவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.