Petta USA All Banner

மீண்டும் மாதவனுக்கு ஜோடியாகும் சிம்ரன்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

இஸ்ரோவில் விஞ்ஞானிாக இருந்தவர் நம்பி நாராயணன். இவர் அந்நிய நாடுகளுக்கு ராக்கெட் தொழில்நுட்பத்தை விற்றதாக கைது செய்யப்பட்டார்.  பின்னர் அவர் குற்றவாளி இல்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Simran to act with Madhavan in Rocketry the nambi effect

தற்போது அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிவருகிறது. இந்த படத்தில் நம்பி நாராயணனாக மாதவன் நடிக்கிறார்.

ராக்கெட்ரி : தி நம்பி எபெக்ட் என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் தமிழ் ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இதன் டீசர் கடந்த வருடம் வெளியானது.

இந்நிலையில் இந்த படத்தில்
மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துவருகிறார். இதற்கான படப்பிடிப்பு மும்பையில் நடைபெறவிருக்கிறது. ஏற்கனவே இயக்குநர் பாலச்சந்தர் இயக்கிய பார்த்தாலே பரவசம் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.