16 வயது சிறுமியை.. பாலியல் வன்கொடுமை செய்து.. உடலை சிதைத்து கொலை செய்த கொடூரம்.. பதற வைத்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Mar 13, 2019 06:46 PM

பிலிப்பைன்ஸ் நாட்டில் 16 -வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, உடலை சிதைத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Girl\'s body has been found with her face skinned off in Philippines

பிலிப்பைன்ஸ் நாட்டின் லப்பு-லப்பு என்கிற நகரத்தில் உள்ள பாரங்கே பங்கல் என்ற பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையோரமாக பெண் ஒருவரின் உடல் கிடைப்பதை, அந்த வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் பார்த்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உயிரிழந்த இளம்பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இதனை அடுத்து பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், அவரின் நாக்கு, சுவாசக் குழாய், உணவுக் குழாய், தொண்டை, வலது காது உள்ளிட்ட உடல் உறுப்புகள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அப்பெண்ணின் முகத்தின் தோல் கிழிக்கப்பட்டு, எலும்பு தெரியும் அளவிற்கு கொடுமை செய்யப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பாலியல் கொடுமைக்கு ஆளான பெண் பிலிப்பைன்ஸின் பாரங்கே பகுதியைச் சேர்ந்த கிறிஸ்டின் லீ சிலாவன் என்ற 16 -வயதான பள்ளி சிறுமி என்பது தெரியவந்துள்ளது.

மேலும் யார் கொலை செய்தார்கள்? கொலை செய்யப்பட்டதற்கான நோக்கம் என்ன? என்பது போன்ற கோணங்களில் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக யாரேனும் துப்பு கொடுத்தால் அவர்களுக்கு 1 லட்சம் சன்மானமாக வழக்கப்படும் என அந்நாட்டு காவல்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #PHILIPPINES #GIRL #SEXUALABUSE #MURDER #BIZARRE #CRIME