‘புறப்பட்ட 6 நிமிடங்களில் விபத்துக்குள்ளான விமானம்’..157 பயணிகளின் நிலை?

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Mar 10, 2019 05:41 PM

எத்தியோப்பியா நாட்டில் பயணிகள் விமான விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Ethiopian Airlines has crashed shortly after take-off from Addis Ababa

எத்தியோப்பியா நாட்டின் ஆடிஸ் அபாபா என்னும் நகரில் இருந்து கென்யாவிலுள்ள நைரோபி என்னும் இடத்துக்கு போயிங் -737 ரக விமானம் காலை 08.38 மணியளவில் ஆடிஸ் அபாபா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளது.

திடீரென 08.44 மணியளவில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை போயிங் -737 விமான இழந்துள்ளது. இந்த விமானத்தில் 149 பயணிகள் மற்றும் 8 விமானப் பணியாளர்கள் என 157 பேர் பயணத்துள்ளனர். இந்த விபத்து தொடர்பான தகவலை அந்நாட்டு பிரதமர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனை அடுத்து விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக எத்தியோபியா அரசு தெரிவித்துள்ளது.   

மேலும் இந்த விமானத்தில் பயணித்த பயணிகள் குறித்த விபரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புறப்பட்டு 6 நிமிடங்களே ஆன நிலையில் விமான விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #ETHIOPIANAIRLINESCRASH #BIZARRE