‘இரவு 3 மணி.. மகனின் மீது அமர்ந்து கத்தியால் குத்திய கணவர்’.. கதறிய மனைவி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Mar 11, 2019 04:41 PM

சென்னையில் மனைவி மீதுள்ள சந்தேகத்தால் பெற்ற மகனையே கொன்றுள்ள தந்தையின் கொடுஞ்செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TN husband kills his son in a brutal way in front of his wife

சென்னை வளசரவாக்கத்தை அடுத்த ராமாபுரத்தில் உள்ள செந்தமிழ் நகரைச் சேர்ந்த 50 வயதான சக்திவேல் என்பவர் பெயிண்டிங் தொழிலை புரிந்து வந்துள்ளார். இவருக்கு தச்சு வேலை செய்யும் சதீஷ் என்கிற 22 வயது மகனும், 18 வயது மகளும் உள்ள நிலையில், தனியார் கல்லூரி ஒன்றில் வேலை பார்த்துவரும் தனது மனைவி வேதவள்ளியை சந்தேகத்தின் பேரில் தவறாக பேசி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சக்திவேலின் மனைவி பேசினால் சண்டை வரும் என்று கணவரிடம் பேசாமல் இருந்துள்ளார். ஆனாலும் வேதவள்ளியிடம் சக்திவேல் சண்டையிட்டுள்ளார். மகன் சதீஷ் தன் அம்மா வேதவள்ளிக்கு ஆதரவாக பேசியதால் மேலும் கோபமாகியுள்ளார் சக்திவேல். இரவு தூங்கும்போது, அதிகாலை சுமார் 3 மணி அளவில் வேதவள்ளி அலறல் சத்தம் கேட்டு எழுந்து சென்று பார்த்தபோது, சக்திவேல், தனது மகன் சதீஷின் மீது அமர்ந்தபடி சரமாரியாக கத்தியால் குத்திக்கொண்டிருந்துள்ளார். சதீஷோ அப்பா வேண்டாம், விட்டுவிடுங்கள் என கெஞ்சியுள்ளார்.

அதைப் பார்த்த வேதவள்ளி ஓடிச்சென்று தடுத்துள்ளார். ஆனாலும் தொடர்ந்து கத்தியால் குத்திவிட்டு தப்பியோட முயன்ற சக்திவேலை அக்கம் பக்கத்து உறவினர்கள் பிடித்துவிட்டனர்.  பின்னர் வேதவள்ளி, சக்திவேலைப் பார்த்து, ‘உனக்கு ஏன்யா இந்த கேவலமான புத்தி, நாங்க உனக்கு என்னயா பாவம் பண்ணினோம்.. இப்படி பண்ணிட்டியே’ என்றபடிசொல்லி, தன் மகனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் செல்லும் வழியில் சதீஷின் உயிர் பிரிந்துவிட்டது. இதுபற்றி அறிந்த காவல்துறை சக்திவேலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : #CRIME #SAD #BIZARRE