MIC Anthem Mobile BNS Banner
பேருந்து கட்டண உயர்வு போராட்டம்: தி.மு.க கட்சிக்கொடி ஏந்தி களத்தில் குதித்த திரைப்பிரபலம்!

 

பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்  தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் ம.தி.மு.க, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணிக்கட்சி தலைவர்களும் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

 

இந்த நிலையில் தி.மு.க-வினர் தாம்பரத்தில் நடத்திய போராட்டத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, கையில் கருப்புக்கொடி ஏந்தி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார். 

 

இந்த போராட்டம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கூறுகையில் " இனி அடிக்கடி தி.மு.க போராட்டங்களில் என்னைப் பார்க்கலாம்" என கருத்து தெரிவித்துள்ளார்.

 

தொண்டர்களுடன், தொண்டராக இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள உதயநிதி, முதன்முறையாக தி.மு.க கட்சியின் கொடியை ஏந்தி போராட்டக்களத்தில் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

BY |

Email Subcription

OTHER NEWS SHOTS

அஸ்வினை பஞ்சாப்புக்கு தாரை வார்த்த சிஎஸ்கே.. சென்னை ரசிகர்கள் அதிர்ச்சி!
கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 11-வது ஐ.பி.எல் ஏலம் பெங்களூரில் இன்று காலை 1௦ மணிக்குத் தொடங்கியது....  ... முதல் வீரராக ஷிகர் தவான் ஏலத்தில் விடப்பட்டார். அவரை பஞ்சாப் அணி 5.2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. எனினும் ஹைதராபாத் அணி 'ரீடெயின்' முறையில்  தவானைத் தக்க வைத்துக் கொண்டது.... தொடர்ந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஏலத்தில் விடப்பட்டார். அவரை ஏலத்தில் எடுக்க சென்னையைத் தவிர, பிற அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது....  ... இறுதியில் பஞ்சாப் அணி அஸ்வினை ரூ 7.6௦ கோடிகளுக்கு ஏலத்தில் எடுத்தது. சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவரான அஸ்வினை ஐ.பி.எல் ஏலத்தில் சென்னை அணி விட்டுக்கொடுத்தது சென்னை ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது....  
Read More News Stories