"ஐ லவ் இந்தியா"...போலீஸ் பைக்கில் வலம் வந்த கெயில்!

Home > News Shots > Tamil Nadu

By Jeno | Oct 26, 2018 10:58 AM
Chris Gayle rides Mumbai Police Bike and said I Love India

மைதானத்திற்குள் மட்டுமல்ல,மைதானத்தின் வெளியேயும் அதிரடி காட்டுபவர் கிறிஸ் கெயில்.இதனால் அவருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.தனது அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர் போட்டிகளில் மிரட்டி வருகிறார்.

 

இந்நிலையில் இந்தியா வந்துள்ள கெயில்,தனது நெருங்கிய நண்பரும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுமான விராட் கோலியை சந்தித்து 10,000 ரன்களை கடந்து சாதனை படைத்ததற்காக தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.மேலும் மும்பை காவல்துறையினரை சந்தித்த கெயில்,அவர்களின் ரோந்து பைக்கில் சிறிது நேரம் வலம் வந்தார்.இதுதொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் "ஐ லவ் இந்தியா" என குறிப்பிடுள்ளார்.

 

அவர் காவல்துறையினருடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்து,அவர் அதிவேகமாக வாகனம் ஓடியதற்காக கெய்லுக்கு அபராத சீட்டு வழங்கப்பட்டுள்ளது என சிலர் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வந்தார்கள்.ஆனால் அவருக்கு அப்படி எதுவும் வழங்கபடவில்லை எனவும் அவர் கோலியை பார்ப்பதற்காக தான் வந்தார் என மும்பை காவல்துறை விளக்கமளித்துள்ளது.

 

Tags : #CHRIS GAYLE #MUMBAI POLICE #BIKE RIDE