MIC Mobile BNS Banner
Bus fare hike: Kamal Haasan lashes out

Actor Kamal Haasan took to the micro-blogging site Twitter to express his view on the recent hike in bus ticket rates. The actor has announced that he will launch his political party on February 21 in his native place, Ramanathapuram.

BY |

Email Subcription

OTHER NEWS SHOTS

மனைவியுடன் தொடர்பு: இன்ஸ்பெக்டரை செருப்பால் அடித்து போலீசில் ஒப்படைத்த கணவர்
காவல் அதிகாரியான தனது மனைவியுடன் முறையற்ற தொடர்பு வைத்திருந்த இன்ஸ்பெக்டரை, கணவர் செருப்பால் அடித்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....  ... தெலுங்கானாவின் லஞ்ச ஒழிப்பு துறையில் ஏ.எஸ்.பி-யாக பணியாற்றும் சுனிதா ரெட்டி என்பவருக்கும், இன்ஸ்பெக்டர் மல்லிகார்ஜுனா என்பவருக்கும் இடையே முறையற்ற தொடர்பு இருந்துள்ளது. இதனைத் தெரிந்து கொண்ட சுனிதா ரெட்டியின் கணவர், இந்த முறையற்ற தொடர்பை  நிறுத்தி விடும்படி சுனிதாவிடம் தெரிவித்திருக்கிறார்.  கணவர் தெரிவித்தும் சுனிதா, மல்லிகார்ஜுனாவுடனான தொடர்பை நிறுத்தவில்லை....  ... இந்தநிலையில், மாதப்பூர் பகுதியை சேர்ந்த அடுக்குமாடி குடியிருப்பில் சுனிதா ரெட்டியும், மல்லிகார்ஜுனாவும் ஒன்றாக இருந்த தகவல் சுனிதா கணவருக்கு தெரியவந்தது. இதனையடுத்து, தனது உறவினர்களுடன் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு நேரில் சென்ற சுனிதாவின் கணவர், மல்லிகார்ஜுனாவை செருப்பால் அடித்து அருகிலிருந்த மாதப்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்....  ...
பேருந்துக்கட்டண விவகாரம்: 'அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது' என நீதிமன்றம் கைவிரிப்பு!
பேருந்துக்கட்டண உயர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். கட்டண உயர்வைத் தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என, எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராகத் தமிழகம்  முழுவதுமிருந்து தொடரப்பட்ட வழக்குகளை, சென்னை உயர்நீதிமன்றம்  தள்ளுபடி செய்துள்ளது....  ... இந்த வழக்கு குறித்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை அமர்வு, "பேருந்து கட்டண உயர்வு தமிழக மக்களைப் பாதிக்கிறது என்றாலும், நீதிமன்றம் அதில் தலையிட முடியாது. அரசு நிர்வாகத்தை நீதிமன்றம் நடத்த முடியாது," எனக்கூறி இந்த வழக்கினை முடித்து வைத்துள்ளது....  ... மேலும், அனைத்து அரசுப் பேருந்துகளிலும் புதிய கட்டண அட்டவணையை ஒட்டுமாறு, தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது....
Read More News Stories