"சாலையில் அவசரமாக தரை இறங்கிய போர் விமானம்"...வெடித்து சிதறியதால் அதிர்ச்சி!

Home > News Shots > தமிழ்

By Jeno | Oct 25, 2018 04:01 PM
vintage world-war-II model single-engine plane crashed

அமெரிக்காவில் 2-ம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்ட போர் விமானம் தொழிநுட்ப கோளாறின் காரணமாக சாலையில் வெடித்து சிதறியது.

 

2-ம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட யுஎஸ் ஏடி 6 (US AT 6) என்ற விமானத்தை அலாஸ்காவைச் சேர்ந்த ராப் பிலிஸ் என்பவர் ஏலத்தில் எடுத்து பயன்படுத்தி வந்தார்.அவர் அவ்வப்போது அந்த விமானத்தில் சுற்றுவது வழக்கம்.இதேபோல் நேற்று கலிபோர்னியாவை சுற்றி கொண்டிருந்தார்.

 

இந்நிலையில் லாஸ் ஏஞ்சலிஸின் புறநகர் பகுதிக்கு வந்தபோது விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது.இதனால் விமானத்தை சாலையில் இறக்க பிலிஸ் முயற்சி செய்தார்.ஆனால் சற்றும் எதிர்பாராத நிலையில் விமானம் இறங்கும் போது உராய்வு ஏற்பட்டு இரண்டாக வெடித்துச் சிதறியது.வெடித்து சிதறிய வேகத்தில் விமானத்தில் கடுமையாக தீ பற்றி கொண்டது.பிலிஸ் சாதுரியமாக வெளியில் குதித்ததால் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

Tags : #WWII FIGHTER PLANE #CALIFORNIA #SECOND-WORLD-WAR