'தளபதி விஜய் அப்படி பேசச்சொல்லி யாருக்கும் அதிகாரம் கொடுக்கல'.. அதிரடி ரிப்போர்ட்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 02, 2019 08:05 PM
Vijay makkal iyakkam Official Press Release regarding his Ex-PRO

நடிகர் விஜய் நடத்திவரும் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்திலிருந்து ஒரு அதிரடியான பத்திரிகையாளர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘நமது  தளபதி விஜய் அவர்களின் முன்னாள் மக்கள் தொடர்பாளராக நீண்டகாலம் நல்ல விதமாக  பணிபுரிந்தவர் தற்போது  வேறு சில காரணங்களால் அப்பணியில், நமது தளபதி விஜய் அவர்களுடன்  இல்லை என்பதை தங்களின்  மேலான கவனத்திற்கு கொண்டு வர கடமைப்பட்டுள்ளேன்.

 

மேலும் அவர், நமது விஜய் மக்கள் இயக்கத்தில் யாதொரு பொறுப்பையும் இதுநாள் வரை வகிக்கவில்லை. இருப்பினும், தளபதி விஜய் அவர்களின் பெயரை பயன்படுத்தி ஒரு சிலர், தங்களது சொந்த கருத்தை, தளபதி விஜய் அவர்களின்  கருத்தைப் போல் ஊடகங்களில் வெளியிடுவதை நமது மதிப்புமிகு தளபதி விஜய் அவர்கள் ஏற்கவில்லை என்பதை இதன் மூலம் உறுதிப்படுத்த விரும்புகிறேன்.

 

அதோடு, நமது தளபதி விஜய்  அவர்கள் எந்த காலக்கட்டத்திலும், எச்சூழலிலும், சக நடிகர்களையோ, பொது மனிதர்களையோ, இழிவாக, தரம் தாழ்ந்தோ, ஒப்பிட்டோ பேசியதில்லை. அப்படி பேசச் சொல்லி யாருக்கும் நமது தளபதி விஜய் அவர்கள்  அதிகாரம் அளிக்கவும் இல்லை என்பதை இந்நேரத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

 

ஆகவே,  தளபதி விஜய் குறித்த தகவல்களை, ஊடகங்களில் பேசுவது, விவாதிப்பது, பங்கேற்று  கருத்து கூறுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவோரின் கருத்துக்களை  யாரும் நம்பவேண்டாம் என இதன் மூலம்  கேட்டுக்கொள்கிறேன்’ என்று அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை பொறுப்பாளர் புஸ்ஸி. என். ஆனந்து தனது பார்வைக்குட்பட்டு கையெழுத்திட்டு, விஜய் மக்கள் இயக்கத்தின் இந்த அதிரடி அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

 

Tags : #VIJAYMAKKALIYAKKAM #THALAPATHYVIJAY #ACTORVIJAY #PRESSRELEASE