பூஜாவை காதலிக்கிறேன், அதனால் சரியாக படிக்க முடியவில்லை: மாணவன் புலம்பல்!
Home > News Shots > தமிழ்By Satheesh | Apr 02, 2018 06:23 PM

உத்திரப்பிரதேசத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
விடைத்தாள்களை திருத்தும்போது, மாணவர்களின் விடைத்தாள்களில் பல வினோதமான கதைகளை படிக்க முடிவதாக ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.
ஒரு மாணவர், தான் பூஜா என்ற பெண்ணை காதலித்து வருவதாகவும், அதனால் தேர்வை சரியாக எழுத முடியவில்லை என்றும் எழுதியுள்ளார்.
இன்னொரு மாணவன், விடைத்தாளில் ரூபாய் நோட்டுகளை வைத்து தைத்துவிட்டு, தன்னை எப்படியாவது தேர்ச்சி செய்துவிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தனக்கு தாய் இல்லை, தந்தை மட்டும் தான் இருக்கிறார். தேர்ச்சி பெறவில்லை என்றால் தன்னை கொலை செய்துவிடுவார், என்று இன்னொரு மாணவர் எழுதி வைத்துள்ளார்.
மாணவர்களின் இவ்வாறான பதில்களை பார்த்து, விடைத்தாள் திருத்தம் செய்யும் ஆசிரியர்கள் திகைப்பில் உள்ளனர்.



OTHER NEWS SHOTS
