போலீஸ் 'பாதுகாப்புடன்' சென்னையை 'வலம்வரும்' எஸ்.வி.சேகர்!
Home > News Shots > தமிழ்By Manjula | Jun 13, 2018 12:41 PM

நடிகரும்,பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் போலீஸ் பாதுகாப்புடன் உலா வரும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் அவதூறான கருத்துக்களை பதிவிட்ட எஸ்.வி.சேகர் மீது, பத்திரிகையாளர்கள் புகார் அளித்தனர். இது தொடர்பாக எஸ்.வி.சேகர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் 50 நாட்களுக்கு மேலாகியும் எஸ்.வி.சேகரை போலீஸ் இன்னும் கைது செய்யவில்லை.
இதற்கிடையில் நேற்று மதியம் சென்னை படப்பை அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு போலீஸ் பாதுகாப்புடன் சாப்பிட வந்த எஸ்.வி.சேகர், அங்கு உள்ளவர்களுடன் 'செல்பி' எடுத்துக் கொண்டுள்ளார்.50 நாட்களுக்கு மேலாகியும் எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாததால் போலீசாருக்கு எதிராக, சமூக வலைதளங்களில் கண்டனக்குரல்கள் எழுந்து வருகின்றன.
இதற்கிடையில் வருகிற 20-ந்தேதி அவர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக எஸ்.வி.சேகரின் முன்ஜாமீன் மனுக்கள் நீதிமன்றத்தில் தள்ளுபடியானது குறிப்பிடத்தக்கது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS
