'முன்னணி' ஹீரோவின் படத்தில்.. 'பின்னணி' பாடகராக அறிமுகமாகும் செந்தில் கணேஷ்!

Home > News Shots > தமிழ்

By |
Senthil Ganesh makes his flim debut Sivakarthikeyan\'s Seema Raja

சூப்பர் சிங்கர் 6 டைட்டிலை வென்ற பாடகர் செந்தில் கணேஷ், இசையமைப்பாளர் இமான் படத்தில் பின்னணிப் பாடகராக அறிமுகமாகவிருக்கிறார்.

 

சமீபத்தில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் 6 இறுதிப்போட்டியில் டைட்டில் வென்ற செந்தில் கணேஷ்க்கு ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான வீடு பரிசாகக் கிடைத்தது. மேலும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்துள்ளது.

 

இந்தநிலையில் சீமராஜா படத்தில் செந்தில் கணேஷை பின்னணிப்பாடகராக அறிமுகப்படுத்துவதாக,  இசையமைப்பாளர் டி.இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்," நாட்டுப்புற பாடகர் செந்தில் கணேஷை சீமராஜா படத்தில் பின்னணிப் பாடகராக அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறேன்,'' என தெரிவித்துள்ளார்.

 

பொன்ராம் இயக்கத்தில் உருவாகி வரும் சீமராஜா படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ள இப்படத்தில் முக்கிய வேடத்தில் நெப்போலியன்,சூரி,சிம்ரன் ஆகியோரும், சிறப்புத் தோற்றத்தில் கீர்த்தி சுரேஷும் நடித்துள்ளனர்.24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ள இப்படம் ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு செப்டம்பர் 13-ம் தேதி வெளியாகவுள்ளது.

Tags : #SENTHILGANESH

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Senthil Ganesh makes his flim debut Sivakarthikeyan's Seema Raja | தமிழ் News.