வரி கட்டாததால் 23 மாதங்கள் சிறை தண்டனை.. கால்பந்தாட்ட வீரர் ரொனால்டா எடுத்த முடிவு!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Jan 23, 2019 02:36 PM

போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு ஸ்பெயின் நாட்டு அரசு ரூ.153 கோடி அபராதம் விதித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ronaldo agrees to pay fine for tax fraud to avoid prison sentence

கால்பந்தாட்டத்தின் சூப்பர் ஸ்டாரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு ரியல் மாட்ரிட் கிளப் சார்பாக விளையாடி யூரோ கோப்பையை ரொனால்டோ வென்று கொடுத்துள்ளார்.

கடந்த 2009 முதல் 2018-ஆம் ஆண்டு வரை ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரியல் மாட்ரிட் கிளப்பில் விளையாடி வந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, தற்போது யுவன்டஸ் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். ஆனால் அவர் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடியபோது முறையான வருமான வரி செலுத்தவில்லை என்று ஸ்பெயின் நாட்டு அரசு ரொனால்டோ மீது வழக்கு பதிவு செய்தது.

இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் ரொனால்டோ மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 23 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து வருமான வரித்துறையினருடன் சமரசம் செய்துகொள்வதாக ரொனால்டோ தெரிவித்திருந்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி சிறைதண்டனைக்கு மாற்றாக, ரூ.153 கோடி அபராதம் செலுத்தவேண்டும் என்று உத்திரவிட்டார். இதைக் கேட்ட கிறிஸ்டியானோ ரொனால்டோ சிறை தண்டனையிலிருந்து தப்பிக்கும் வகையில் அபராதத் தொகையை கட்டுவதற்கு ஒப்புக்கொண்டார்.

Tags : #RONALDO #REALMADRID #JUVENTUS #CRISTIANORONALDO #PORTUGAL