'சாக்லேட் வாங்கினால் டேட்டா இலவசம்'.. ஜியோ அதிரடி!

Home > News Shots > தமிழ்

By Jeno | Sep 07, 2018 11:42 AM
reliance jio myjio app 1gb 4g data cadbury dairy milk offer

ரிலையன்ஸ்  ஜியோ அவ்வப்போது சலுகைகளை அறிவித்து வருகிறது.தற்போது சாக்லேட் வாங்கினால் 1 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.கேட்பரி டெய்ரி மில்க் உடன் இணைந்து ரிலையன்ஸ் ஜியோ அதன் பயனர்களுக்கு 1 ஜிபி இலவச டேட்டா வழங்குகிறது. இலவச டேட்டா பெற பயனர்கள் டெய்ரி மில்க் சாக்லேட் கவரின் புகைப்படத்தை மைஜியோ ஆப்பில் பதிவேற்றினால் போதும்.

 

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் டெய்ரிமில்க் சேர்ந்து வழங்கும் இந்த சலுகையை பெற கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

 

  • மைஜியோ ஆப் சென்று ‘Get the tastiest 1GB of data ever' என்ற பேனரை க்ளிக் செய்ய வேண்டும்
  • அடுத்து சலுகையில் பங்கேற்கக் கோரும் PARTICIPATE NOW ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்
  • உங்களது மொபைல் கேமராவை இயக்க செயலியை அனுமதிக்க வேண்டும்
  • டெய்ரி மில்க் சாக்லேட் காலி கவரை புகைப்படம் எடுக்க வேண்டும்
  • புகைப்படம் அப்லோடு ஆகும் வரை காத்திருக்க வேண்டும்
  • இறுதியில் ‘KEEP 1GB’ ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்

 

இந்த சலுகையை ஒரு ஜியோ எண்ணிற்கு ஒருமுறை மட்டுமே இலவசமாக  பெற முடியும்

Tags : #JIO #RELIANCE JIO #CADBURY DAIRY MILK