ஒருவழியாக சூரியனை நெருங்கும் நாசா!

Home > News Shots > தமிழ்

By |
NASA Launching Satellite to the Sun

நாம் வாழும் பூமி உள்ளதோ சூரிய குடும்பத்தில்தான். பால்வழி அண்டத்தில் இருந்து உடைந்து வந்த துகள்களில் ஒன்றுதான் சூரியன் என்றும் அது தனக்கான வட்டத்தில் சில கோள்களின் நடுவே நீள்வட்ட மையத்தில் அமைந்துள்ளது என்றும் அறியப்படுகிறது. முன்னதாக பூமி தொடங்கி நிலா, செவ்வாய் கிரகம் என்று பலதரப்பட்ட கோள்களுக்கு உலக நாடுகள் செயற்கைக் கோள்களை அனுப்பியுள்ளன. சில நாடுகள் விண்வெளியிலேயே விண்வெளி ஆய்வு மையத்தை நிறுவியுள்ளன.

 

ஆனால் இவற்றுக்கெல்லாம் முன்னோடியான நாசா, தொடர்ந்து தன் முன்னிடத்தை தக்க வைத்துக்கொண்டிருக்கவே செய்கிறது. நாசாவின் அடுத்த படிநிலையாக, சூரியனிடம் நெருங்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளது.  முன்னதாக வானியல் ஆய்வுக் கருத்தரங்கம் ஒன்றில் சூரியனுக்கு மிக அருகாமையில் செல்லவுள்ள விண்கலத்தை செலுத்த உள்ளதாக நாசா அறிவித்திருந்தது. 1300 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தாங்கக் கூடிய இந்த விண்கலம் சூரியன் இருக்கும் காற்றுமண்டலத்தில் பலவிதமான  ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.

 

பார்க்கர் சோலார் ப்ரோப் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலம்  அங்குள்ள ’கொரொமா’ வளிமண்டலத்தை நெருங்கும் போது பூமியினுடனான இதன் தொடர்பில் இருந்து துண்டிக்கப்படும்.  பூமியில் இருந்து ஏவப்பட்டு, 3 மாதங்களில் சூரியனின் சுற்று வட்டபாதையை சென்றடைந்து, சூரியனின் அபூர்வமான பல புகைப்படங்களை பூமிக்கு அனுப்பவுள்ளது.

 

விண்கலம் ஏவப்பட்டவுடன், புவிமண்டலத்தில் இருந்து ஏறக்குறைய 14 கோடி கிலோ மீட்டர் தூரம் வான்நோக்கி சென்று, 7 வருடங்கள் பயணித்து,  சூரியன் இருக்கும் இடத்தில் இருந்து கிட்டத்தட்ட 40 லட்சம் மைல் தூரத்தில் நிலைகொள்ளவிருக்கும் இந்த விண்கலத்துக்கு சூரிய காற்றை கண்டறிந்த ஈகின் பார்க்கர் என்கிற விஞ்ஞானியின் பெயரை நினைவூட்டும் வகையில் விண்கலத்துக்கு  இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Tags : #NASA #PARKERSOLARPROBE #SATELLITE