’மிரட்டிய திருடனை ஒரு கிக்- இரண்டு பஞ்ச்’சில் சுருட்டிய பாக்ஸிங் பெண்’.. தரமான சம்பவம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 08, 2019 05:16 PM
male beaten after trying to rob female UFC fighter goes viral

மெக்டொனால்ஸ் உணவகத்தில் பணிபுரிந்த பெண்ணொருவர் திருடனை தாக்கிப் பிடித்த சம்பவம் முன்னதாக வைரலாகியிருந்தது. இந்நிலையில் ஒரு ஆணுக்கு சரிசமமாக நின்று மல்லுக்கட்டுவதில் பெண்கள் வீராங்கணைகள்தான் என்பதை மற்றுமொரு சம்பவம் நிரூபித்துள்ளது.

 

பிரேஸிலின் கடற்கரை பகுதியான ரியோ டி ஜனோரியாவில் வசித்துவரும், UFO (குத்துச்சண்டையில் அல்டிமேட் சாம்பியன் பட்டம் பெற்றவர்) வீராங்கணை பொலியானா வியானா. 26 வயதான - சாம்பியன் ரெக்கார்டுகளை படைத்துள்ள இவர் தன்னிடம் வந்து மிரட்டிய திருடனை இரண்டே பஞ்ச்’சில் அடித்து நாக்-அவுட் செய்து அசத்தியுள்ள சம்பவம்தான் தற்போது வைரலாகி உள்ளது. 

 

சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த வீராங்கணை தன்னிடம் வந்த திருடனை முதலில் புரியாமல் பார்த்துள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக வியானாவின்  அருகில் வந்த திருடன், வியானாவை பார்த்து, ‘ஏய்.. போனை கொடு.. இல்லன்னா அவ்ளோதான்.. கையில ஆயுதம் வெச்சிருக்கேன் பாத்தல்ல..’ என்று பேசியுள்ளான். 

 

முதலில் சாதுவாகக் கேட்டுக்கொண்டிருந்த வியானா திடீரென விஸ்வரூபம் எடுத்து திருடன் சற்றும் எதிர்பாராத சமயத்தில், ஒரு கிக், இரண்டு பஞ்ச்’சை திருடனை நோக்கி விட்டிருக்கிறார். அவ்வளவுதான், அந்த இடத்திலேயே திருடன் சுருண்டு விழுந்துள்ளான். பின்னர் திருடனினின் அருகே அமர்ந்தபடி, அவனிடம் ‘இனி நாம் போலீசுக்காக  காத்திருக்கலாம்’ என்று ஸ்டைலாக கூறியுள்ளார்.

 

பெண்கள் அனைத்து வகையிலும் முன்னேறி இருக்கின்றனர் என்பதை இந்த நூற்றாண்டு பார்த்துக்கொண்டு வருகிறது. ஆணுக்கு பெண் சளைத்தவர்கள் அல்ல என்பதை பல்வேறு சாதனைகளையும் சோதனைகளையும் செய்து காண்பித்துள்ளனர். அவற்றிற்கு இந்த சம்பவம் மேலும் அழகு சேர்த்துள்ளது. வியானாவின் துணிச்சல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதோடு, அவரது செயல் உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது. 

Tags : #MANBEATEN #ROBBING #UFCFIGHTER #POLYANAVIANA #RIODEJANEIRO