ஷூவில் மாட்டிக்கொண்ட டாய்லெட் பேப்பர்...வைரலாகவும் அதிபரின் வீடியோ !

Home > News Shots > தமிழ்

By Jeno | Oct 05, 2018 03:09 PM
Donald Trump Boarding Plane With Toilet Paper Stuck To Shoe Goes Viral

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சர்ச்சைகளின் நாயகன் என்றே சொல்லலாம்.அவர் செய்யும் செயல் மற்றும் சொல் மட்டுமல்ல,அவரின் சிறு அசைவுக் கூட சர்ச்சையாகி விடுகிறது.ஆனால் இந்த முறை அவரால் சர்ச்சை ஏதுமில்லை.ஆனால் எதார்த்தமாக அவரது ஷூவில் மாட்டிக்கொண்ட டாய்லெட் பேப்பரினால் அவரை கிண்டலடித்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

 

அமெரிக்காவிலுள்ள மினியாபோலிஸ் நகரில் அமைந்துள்ள செயிண்ட் பால் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க அதிபர்கள் மட்டுமே பயணிக்கும் ஏர்போர்ஸ் 1 விமானத்தில் ஏறுவதற்காக செல்கிறார்.அப்போது அவரது ஷூவில் மாட்டிக்கொண்ட டாய்லெட் பேப்பரை கவனிக்காமலே டிரம்ப் விமானத்தில் ஏறிவிடுகிறார்.

 

கண்கொத்தி பாம்பாக எப்போதுமே கேமராவுடன் இருக்கும் பத்திரிகையாளர்களுக்கு சொல்லவா வேண்டும்.இதை கண்ட அவர்கள் அதை படம் பிடித்து வைரலாக்கி விட்டார்கள்.தற்போது நெட்டிசன்கள் "ஒரு அதிபர் டாய்லெட் பேப்பர் ஷூவில் இருப்பதை கூடவா கவனிக்கமாட்டார் என கலாய்த்து வருகிறார்கள்.ஆனால் அது சாதாரண காகிதம் தான் என்று டிரம்பின் ஆதரவாளர்கள் பதிலுக்கு ட்விட் செய்துவருகிறார்கள்.ஆனால் அந்த வீடியோ என்னவோ எக்ஸ்பிரஸ் வேகத்தில் வைரலாகி வருகிறது.

Tags : #DONALD TRUMP #US PRESIDENT #AIR FORCE ONE #TOILET PAPER