விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் டிவி ப்ரீமியர் - KGF Chapter 2
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் டிவி ப்ரீமியர் - KGF CHAPTER 2

ஹோம்பாலே பிலிம்ஸ்  பட நிறுவனம் சார்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் விஜய் கிரகந்தூர் தயாரித்த திரைப்படம் 'கே ஜி எஃப் - சாப்டர் 2’. கேஜிஎஃப் முதல் பாகத்தை தொடர்ந்து கடந்த தமிழ் புத்தாண்டு அன்று திரையரங்குகளில் வெளியான இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிட்டார். 

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'கே ஜி எஃப் சாப்டர்  2' படத்தில் கதையின் நாயகனாக ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ்  நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருந்தார். இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

ராக்கி பாயின் ராஜ்ஜியம் உருவாக தொடங்கும் புள்ளியில் முதல் பாகம் முடிகிறது என்றால், இரண்டாம் பாகம் ராக்கி பாயின் ராஜ்ஜியம், அந்த ராஜ்ஜியத்தில் இணையும் ஒரு பெண், அதை அழிக்க முற்படும் சஞ்சய் தத், அதை எதிர்கொள்ளும் இந்திய தங்க கடத்தல் மன்னன் ராக்கி, அவனை அழித்து நாட்டை சுத்தப்படுத்த முயலும் பெண் பிரதமர் என பிரம்மாண்டமான காட்சியும், திரைக்கதையும் கொண்டது கேஜிஃஎப் சாப்டர் 2. அம்மா செண்டிமென்ண்டை மையமாக கொண்ட இப்படத்தின் 3-ஆம் பாகமும் உருவாவதாக படம் முடிந்திருக்கும்.

இந்த படம் தான், தமிழில், ஜி தமிழ் தொலைக்காட்சியில் வரும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி புதன்கிழமை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே நிலையில் கேஜிஎப் முதல் பாகம் கலர்ஸ் தமிழில் மதியம் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகத் தொடங்கி 6 மணிக்கு முடிகிறது.