vinayakar chathurthi: ஜெயிலர் ரஜினி லுக்கில் விநாயகர் சிலை
VINAYAKAR CHATHURTHI: ஜெயிலர் ரஜினி லுக்கில் விநாயகர் சிலை

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களுக்கு பிறகு இயக்குனர் நெல்சன் திலீப்குமார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை ஜெயிலர் திரைப்படத்தில் இயக்குகிறார். ரஜினிகாந்த்தின் 169வது திரைப்படமான இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.  அனிருத் இசையமைக்கும் இந்த படத்துக்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் உள்ள ஆதித்ய ராம் ஸ்டூடியோவில் துவங்கி உள்ளது. இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். இந்த படத்தின் முதல் லுக் ஃபோஸ்டர் அண்மையில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

vinayakar chathurthi 2022 statue Jailer Rajini Look

இந்நிலையில் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் பின்னால் கைக்கட்டிக்கொண்டு ஜெயிலராக போஸ் கொடுத்துக் கொண்டிருப்பது போலவே இந்த விநாயகர் சதுர்த்தியில் செய்யப்பட்டுள்ள பிள்ளையார் சிலை வைரலாகி வருகிறது.