சர்கார் ஆடியோ லான்ச்
சர்கார் ஆடியோ லான்ச்

ஒரு மன்னர் தன் பரிவாரங்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எலுமிச்சை பழச்சாறு செய்ய உப்பு தேவைப்பட்டதாம். உடனே அமைச்சர் பணியாளை அழைத்து, அருகில் இருக்கும் கடைக்கு சென்று உப்பு எடுத்து வர சொன்னாராம், அதை தடுத்த மன்னர், அப்படி எல்லாம் எடுத்து வர கூடாது, அதற்கான தொகையை கொடுத்து வாங்கி வா என்றாராம். மிகப்பெரிய மன்னரான நீங்கள் எதற்கு பணம் கொடுத்து வாங்க வேண்டும் என மன்னரிடம் கேட்டதற்கு, 'ஒரு மன்னரான நானே இப்படி செய்தால், நாமும் காசு கொடுக்காமல் எடுத்து கொள்ளலாம் என பின்னால் வரும் என் பரிவாரம் மொத்த ஊரையும் கொள்ளை அடித்துவிடும்' என்றாராம்.  - தலைவன் எவ்வழியோ மக்கள் அவ்வழியே.