தாய்க்குடம் பிரிட்ஜ் குழுவை பாராட்டிய ஏ.ஆர்.ரகுமான்
தாய்க்குடம் பிரிட்ஜ் குழுவை பாராட்டிய ஏ.ஆர்.ரகுமான்

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு ட்ரிபியூட் செய்யும் விதமாக தாய்க்குடம் பிரிட்ஜ் பேண்ட் செய்த மெட்லி பார்வையாளர்களை மட்டுமின்றி ஏ.ஆர்.ரகுமானையும் வெகுவாக ஈர்த்தது. Performance முடிந்ததும் இசையமைப்பாளரும், இசைக்குழுவின் உறுப்பினருமான கோவிந்த் வசந்தாவை டேக் செய்து ட்விட்டரில் தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழுவிற்கு தனது பாராட்டுக்களை ரகுமான் பதிவிட்டார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக, ‘மிக்க நன்றி சர். உங்களிடம் இருந்து இந்த வாழ்த்தை பெறுவது உலகமே எங்களுடையது என தோன்றுகிறது. இந்த பிறவியில் உங்களை சந்தித்துவிட்டேன்’ என நெகிழ்ச்சியாக பதிவிட்டிருந்தார்.