மீண்டும் தொடங்கிய இடத்திலேயே - வெற்றிக் களிப்பில் LKG ஹீரோ

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக அறிமுகமான ‘எல்.கே.ஜி’ திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் நல்ல வசூலை எட்டி வருகிறது.

RJ Balaji thanked everyone for unreal acceptance and numbers of LKG

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தயாரிப்பில் கே.ஆர்.பிரபு இயக்கிய LKG திரைப்படம் கடந்த பிப்.22ம் தேதி ரிலீசானது. இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ், ராம்குமார் கணேசன், மயில்சாமி, ஆனந்த்ராஜ், மனோபாலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அரசியல் காமெடி திரைப்படமான ‘எல்.கே.ஜி’ வசூல் மற்றும் விமர்சன ரீதியாக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

எல்.கே.ஜி படத்தை ஏற்றுக் கொண்டதையும், அதன் எண்களையும் நம்ப முடியவில்லை. உண்மையான அன்பிற்கும், நம்பிக்கைக்கும் நன்றி. என்றும் நன்றியுடன் இருப்பேன். தொடங்கிய இடத்திற்கே மீண்டும்.. அற்புதமான வாழ்க்கை’ என ட்வீட் செய்து, குழந்தைகளுடன் சூப்பர் ஸ்டாரின் மரண மாஸ் பாடல் பாடும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.