எனை நோக்கி பாயும் தோட்டா படம் குறித்த அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இயக்குநர் கௌதம்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. இந்த படம் அறிவிக்கப்பட்டபோதே ரசிகர்களிடேயே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

Gautham Vasudev Menon gives exciting announcement from Enai Noki Paayum Thotta starring Dhanush and Megha Akash

மேலும் இந்த படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த படத்துக்கு தர்புகா சிவா இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இயக்குநரும் நடிகருமான சசிக்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்த இந்த படம் இன்னமும் வெளியாகமலேயே இருந்தது. தற்போது இந்த படத்தின் சென்சார் செய்யும் பணிகள் முடிவடைந்து படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனால் இந்த படம் விரைவில் வெளியாகலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் எனை நோக்கி பாயும் தோட்டா படம் குறித்து புதிதாக பதிவிட்டுள்ளார். அதில், தற்போது எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இசை சம்பந்தமான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக  அவர் அறிவித்துள்ளார்.