அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் வெளியானது 'கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்' டீஸர்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

'அட்டகத்தி', 'பீட்சா', 'சூதுகவ்வும்', 'இறைவி' உள்ளிட்ட தரமான படங்களை திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட்  சார்பில் தயாரித்தவர் சி.வி.குமார். இவர் 'மாயவன்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

Dhanush releases teaser CV Kumar's Gangs Of Madras Teaser

தற்போது அவர் தனது இரண்டாவது படமான கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ் படத்தை இயக்கிவருகிறார். இந்த படத்தில் அசோக், பிரியங்கா, டேனியல் பாலாஜி, வேலு பிரபாகரன், நரேன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு கார்த்திக் கே தில்லை ஒளிப்பதிவு செய்ய ஹரி டஃபுஸியா பாடல்களுக்கு இசையைத்துள்ளார். ஷியாமலங்கன் இந்த படத்துக்கு பின்னணி இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் டீஸரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். பரபர ஆக்சன் காட்சிகள் இந்த டீசரில் இடம் பெற்றுள்ளது.

அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் வெளியானது 'கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்' டீஸர் VIDEO