மரண மாஸ் + மாரி மாஸ் = மேக்ஸிமம் மாஸ், அது யார் தெரியுமா?

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

இந்திய சினிமாவின் ஸ்டைல் ஐகானாக விளங்குபவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவரது பேரக் குழந்தையான யாத்ரா தனது தாத்தாவையும், அப்பாவையும் ஸ்டைலில் ஓரங்கட்டியுள்ளார்.

Actress Aarthi shares Marana Mass stills of Rajinikanth, Dhanush and Yatra Dhanush

ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா - தனுஷ் தம்பதியின் மூத்த மகன் யாத்ரா தனுஷ், தனது தாத்தா ரஜினிகாந்த் மற்றும் அப்பா தனுஷின் ஸ்டைல் பிம்பத்தை அடித்து நொறுக்கும் விதமாக நடிகை ஆர்த்தி புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

காமெடி நடிகையான ஆர்த்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். இவர் எந்திரன் படத்தில் வரும் ரஜினிகாந்த், மாரி லுக்கில் இருக்கும் தனுஷின் புகைப்படங்களுடன் சேர்த்து யாத்ரா தனுஷின் சமீபத்திய புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

அவரது பதிவில், ‘மரண மாஸ் + மாரி மாஸ் = மேக்ஸிமம் மாஸ்.. அதே ரத்தம் அப்படித்தானே இருக்கும்.. கலக்குங்க குட்டி தலைவா’ என கூறியுள்ளார். இந்த புகைப்படத்தை ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.