Petta USA All Banner

தமிழகத்தை உலுக்கிய எச்ஐவி ரத்த விவகாரத்தை பேசும் தாதா 87 படத்தின் டீசர்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

நடிகர் கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் ஏராளமான படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் தளபதி, வேதம் புதிது போன்ற படங்களில் அவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டுள்ளது.

charuhasan's Dha Dha 87 teaser released

தற்போது அவர் தா தா 87 படத்தில் டைட்டில் ரோலில் வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை விஜய் ஸ்ரீ இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. அதில், தா தா கூட்டத்தின் தலைவராக வரும் அவர், அடப்பாவிகளா ஏழைகள் வேற வழியில்லாம தான் அரசு ஆஸ்பத்திரிய தேடி வராங்க, ரத்தத்த மாத்திட்டிங்களே டா என வசனம் பேசுவார்.

சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி பாதிக்கப்பட்ட ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தை இந்த வசனம் நியாபகப்படுத்தும் விதமாக உள்ளது.

தமிழகத்தை உலுக்கிய எச்ஐவி ரத்த விவகாரத்தை பேசும் தாதா 87 படத்தின் டீசர் VIDEO