கார்த்தியின் அடுத்த படம் குறித்து முக்கிய அறிவிப்பு

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த வருடம் வெளியான கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.  தற்போது அவர் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் தேவ் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் பிரீத்சிங் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

Casting call announcement from Karthi and Remo director Bakkiyaraj kannan's film

இந்நிலையில் இதனையடுத்து டீரிம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் நடிகர் கார்த்தி நடிக்கவுள்ளார். இந்த படத்தை ரெமோ படத்தின் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கவுள்ளார்.  இந்நிலையில் இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதில் இந்த படத்தில் நடிக்க விருப்பமுள்ளவர்களுக்கான அழைப்பை வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கவிருப்பமுள்ளவர்கள் வருகிற 25  மற்றும் 26 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை சாலிகிராமத்தில் உள்ள செந்தில் ஸ்டுடியோஸ்க்கு வர வேண்டும் என அறிவித்துள்ளது.