'கத்தி' போன்று 'தளபதி 63' யிலும் இதனை எதிர்பார்க்கலாம் - தயாரிப்பாளர் தரப்பு

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

தமிழ் சினிமாவில் தற்போது திரைப்படங்கள் எடுப்பதை விட அதனை சரியாக விளம்பரப்படுத்துதல் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.  ஒரு படத்தின் தன்மையை தெரிந்து கொள்ள அந்த படத்தின் போஸ்டர் மிகவும் உதவி புரிகிறது.

AGS Entertainment CEO said will expect Thalapathy 63 poster like Kaththi

அந்த வகையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான கத்தி படத்தின் போஸ்டர் மிகவும் வரவேற்கப்பட்ட ஒன்று. அந்த போஸ்டரை கோபி பிரசன்னா வடிவமைத்தார். தற்போது இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் விஜய் நடித்துவருகிறார்.

இந்நிலையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் அர்ச்சனா கல்பாத்தி, கத்தி படத்தின் எப்பொழுதுமே என் விருப்பமான போஸ்டர்களில் ஒன்று. அதனை வடிவமைத்தவர் மிக திறமைவாய்ந்த கோபி பிரசன்னா. அந்த போஸ்டர் என்னுடைய அலுவலகத்தில் இருக்கிறது.   அதே போன்று எங்களது பேனரில் உருவாகும் தளபதி 63 படத்திலும் எதிர்பார்க்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.