விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தின் முதல் சிங்கிள் குட்டி கதை பிப்ரவரி 14 அன்று வெளியாகவுள்ளது. இந்நேரத்தில், தனது பாடல் வெளியீட்டு விழக்களில் விஜய் சொல்லிய சில குட்டி கதைகளின் தொகுப்பு இதோ.

புலி ஆடியோ லான்ச்
புலி ஆடியோ லான்ச்

சின்ன வயதில் இருந்தே அவருடன் படித்தவர்கள், உடன் இருந்தவர்கள் அனைவரும் அவரை குறை சொல்லிக்கொண்டே இருந்தார்களாம். அவரும் அதையெல்லாம் சரி செய்து கொண்டே இருந்தாராம். அப்படி குறை சொல்லப்பட்டவர் பில்கேட்ஸ். இன்று அவர் மிகப்பெரிய உயரத்தில் இருக்கிறார். ஆனால் அவர் மீது குறை சொல்லியவர்கள் எல்லாம் அவர் கம்பனியில் ஊழியர்களாக இருக்கிறார்களாம்.  - யாரையும் குறைத்து மதிப்பிட கூடாது.