நடிகர் விஜய் நடிப்பில் அடுத்து உருவாகி வரும் திரைப்படத்தின் டைட்டில் என்ன என்பது குறித்து வீடியோ ஒன்றின் மூலம் படக்குழு அறிவித்துள்ள நிலையில், இந்த வீடியோ மற்றும் விக்ரம் படத்தின் டைட்டில் டீசர் ஆகியவற்றை ஒப்பிட்டு பல்வேறு கருத்துக்களையும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

கமல்ஹாசனின் விக்ரம், விஜய்யின் Leo
கமல்ஹாசனின் விக்ரம், விஜய்யின் LEO

நடிகர் விஜய் நடிப்பில் அடுத்து உருவாகி வரும் திரைப்படத்தின் டைட்டில் என்ன என்பது குறித்து வீடியோ ஒன்றின் மூலம் படக்குழு அறிவித்துள்ள நிலையில், இந்த வீடியோ மற்றும் விக்ரம் படத்தின் டைட்டில் டீசர் ஆகியவற்றை ஒப்பிட்டு பல்வேறு கருத்துக்களையும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

வாரிசு படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி இருந்தது.

இந்த படத்தின் டைட்டில் என்ன என்பது குறித்த அறிவிப்பை வீடியோ ஒன்றுடன் வெளியிட்டிருந்தது படக்குழு. 'Leo' என படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில், லோகேஷ் கனகராஜ் இதற்கு முன்பு இயக்கிய விக்ரம் மற்றும் கைதி படங்களுடன் சேர்ந்து லோகேஷ் யூனிவர்ஸில் Leo படம் வருமா என்பதை அறியவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

அந்த வகையில், கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் இயக்கி இருந்த விக்ரம் திரைப்படத்தின் டைட்டில் டீசரையும், Leo படத்தின் டைட்டில் Announcement வீடியோவையும் ஒப்பிட்டு இரண்டிலுமுள்ள ஒற்றுமைகள் குறித்த காட்சிகளின் புகைப்படங்களும் தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது.