உதகை, 16, பிப்ரவரி 2022:  நடிகர் தனுஷ் தமது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 16.10.2021 அன்று பூஜையுடன் துவங்கியது. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மேயாத மான், மகாமுனி படங்களில் நடித்த நடிகை இந்துஜா ஜோடியாக நடிக்கிறார்.

நானே வருவேன்
நானே வருவேன்

அசுரன், கர்ணன் ஆகிய படங்களை தயாரித்த தயாரிப்பளர் கலைப்புலி S தாணு, இந்த படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்துக்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, புவன சுந்தர் எடிட்டராகவும், விஜய் முருகன் கலை இயக்குனராகவும் பணிபுரிகின்றனர், ஒளிப்பதிவாளராக ஓம் பிரகாஷ் பணியாற்ற உள்ளார். சரிகம நிறுவனம் இந்த படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றி உள்ளது.