மணிரத்னம் - தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத தன்னிகரற்ற படைப்பாளி. ‘இதயக்கோயில்’ தொடங்கி ‘செக்க சிவந்த வானம்’ வரை மணிரத்னத்தின் மேஜிக் சினிமா ரசிகர்களை வாய்ப்பிளக்கச் செய்கிறது.

கேமரா, இசை, வசனம் எனும் மும்மொழி அஸ்திரத்தைக் கொண்டு திரைக்காவியம் படைப்பதில் மணிரத்னத்திற்கு இணை அவரே. காதல், ஆக்ஷன், எமோஷன், லிவிங் ரிலேஷன், புரட்சி, தீவிரவாதம், அரசியல், வரலாற்று கதை என படத்துக்கு படம் வித்தியாசமான ஜானரில் உணர்வுபூர்வமான இசையும், காட்சியுமாக ரசிகர்களுக்கு விருந்து படைப்பவர்.

திரையில் இவர் செய்யும் அனைத்து மாயஜால வித்தைகளும் திரைக்கு பின் இப்படி தான் உருவாகிறது என்பதை இந்த புகைப்படத் தொகுப்பில் காணலாம்.

நாயகன் (1987)
நாயகன் (1987)

நாயகன் 80 களில் வெளிவந்த தமிழ் திரைப்படம். இந்தத்திரைப்படம் இந்திய அளவில் பேசப்பட்ட திரைப்படமாகும். கமலஹாசன் இத்திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்தார். மேலும் இத்திரைப்படம் டைம் வார இதழின் உலகின் நூறு சிறந்த திரைப்படங்களிள் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இத்திரைப்படத்தில் சிறந்த நடிகருக்கான 1988 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட தேசிய விருதினை கமலஹாசன் பெற்றுக்கொண்டார்.