காற்று வெளியிடை (2017)
காற்று வெளியிடை (2017)

காற்று வெளியிடை 2017 ஆவது ஆண்டில் மணிரத்னம் எழுத்து மற்றும் இயக்கத்தில் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். கார்த்திக் சிவகுமார், அதிதி ராவ் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இது ஒரு திகில் கலந்த காதல் திரைப்படமாகும். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ள இத்திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். தமிழில் வெளியான அதே நாளில் செழியா என்னும் பெயரில் தெலுங்கிலும் வெளியானது. இத்திரைப்படத்தின் பாடல்கள் 2018 ஆம் ஆண்டிற்கான தேசிய விருதினைப் பெற்றுள்ளது; சிறந்த இசையமைப்பிற்காக (பாடல்கள்) ஏ. ஆர். ரகுமானுக்கும் சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருது சாஷா திருப்பதிக்கும் கிடைத்துள்ளன.