ட்ரெண்டாகும் பயோ பிக் சீசன்; உருவாகிறது சானியா மிர்ஸாவின் வாழ்க்கை வரலாறு

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகவுள்ளது.

Tennis star Sania Mirza announces a biopic on her

கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தோனி, மேரி கோம் உள்ளிட்டோரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதுடன் வசூலிலும் வாரி குவித்தது.

அந்த வரிசையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், துப்பாக்கிச் சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா, மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் பயோ பிக் திரைப்படங்களும் உருவாகி வருகிறது. இந்நிலையில், கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற ஒரே இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவின் வாழ்க்கை வரலாறும் திரைப்படமாகவுள்ளது.

இது குறித்த அறிவிப்பை சானியா மிர்ஸா பேட்டி ஒன்றில் வெளியிட்டுள்ளார். ‘சானியா மிர்ஸா’ பயோபிக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இது. தற்போது ஆரம்பக்கட்ட பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது என்னுடைய கதை, இதில் எனது பங்கு அதிகம் உள்ளது என சானியா தெரிவித்துள்ளார்.

இப்படத்தை ரோனி ஸ்குருவாலா உருவாக்கவுள்ளார். அவரது தயாரிப்பு நிறுவனத்துடன் சானியா ஒப்பந்தம் செய்துள்ளார். இப்படம் குறித்த கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.