படுஜோரான பார்ட் 2 சீரிஸ்; சூர்யா-ஜோதிகாவின் அடுத்த ரொமாண்டிக் படம் இதுவா?

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

தமிழ் திரையுலகில் அவ்வப்போது ஒவ்வொரு ஜானர் வகையிலான திரைப்படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெறும். அந்த வகையில் பேய் படம், அடல்ட் காமெடி, பயோபிக், போன்ற வரிசையில் பார்ட்-2, 3 போன்ற சீரிஸ்களுக்கு கூடுதல் எதிர்ப்பார்ப்புகளும் உள்ளன.

Suriya Jyothika to reunite for romantic film Kaakha Kaakha 2?

சமீபகாலமாக வெற்றி பெற்ற திரைப்படங்களின் அடுத்தடுத்த பாகங்களை உருவாக்குவது தமிழ் சினிமாவில் புதிய ட்ரெண்டாக உள்ளது. அந்த வகையில், வேலையில்லா பட்டதாரி 2, சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2, விஸ்வரூபம் 2, மாரி 2, சார்லி சாப்ளின் 2 என சமீபத்தில் வெளியான பெரும்பாலான படங்களுக்கு போதிய வரவேற்பு இல்லை.

இந்நிலையில், கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா-ஜோதிகா இணைந்து நடித்த ‘காக்க காக்க’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. முதல் பாகத்தை தயாரித்த வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ்.தாணு ‘காக்க காக்க 2’ திரைப்படம் தொடர்பாக இயக்குநர் கவுதம் மேனனிடம் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் கூறப்பட்டன.

இது தொடர்பாக Behindwoods தரப்பில் தயாரிப்பாளர் தாணுவை அணுகியபோது, ‘காக்க காக்க 2’ குறித்து பரவிய தகவல்களை மறுத்துள்ளார். தற்போது சூர்யா நடிப்பில் ‘என்.ஜி.கே’, ‘காப்பான்’ திரைப்படங்களும், ஜோதிகா நடிப்பில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸுடன் ஒரு படமும், 2டி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடன் ஒரு படமும் உருவாகி வருகின்றன.

அதேபோல் இயக்குநர் கவுதம் மேனனின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, ‘துருவநட்சத்திரம்’, ‘ஜெயலலிதா பயோபிக்’ வெப் சீரிஸ் ஆகியவை கைவசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.