சூர்யாவின் 'காப்பான்' படத்திலிருந்து அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இயக்குநர்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'என்ஜிகே' படத்தின் டிரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. ரகுல் பிரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

Director K.V. Anand and Suriya's Kappan shooting wrapped

இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து சூர்யா, இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஆர்யா, மோகன்லால், சாயீஷா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும்  இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் இயக்குநர் கே.வி. ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் காப்பான் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்தது. ஆர்யாவுடன் பணிபுரிவது மிகச் சிறந்த அனுபவம். என்றார். படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

பின்னர் இதற்கு பதிலளித்த ஆர்யா, நன்றி சார். உங்களுடன்  பணிபுரிந்தது மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது.  உங்களுடைய அடுத்த படத்துக்காக என்னுடைய நம்பரை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள் . சூர்யா சார், உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி என்றார்.