Petta USA All Banner

ஒரே பாடலில் தனுஷை பின்னுக்குத் தள்ளிய சாய் பல்லவி : என்ன பாடல் தெரியுமா?

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Sai Pallavi's Vachinde song become most viewed south indian song

யூடியூப் கிட்டத்தட்ட 2005 இல் அறிமுகமாகியிருந்தது. ஆனால் வைரல் ஹிட் என்ற வார்த்தை புரிய இந்தியர்கள் 2012 வரை காத்திருக்க வேண்டியிருந்தது.

 

ஐஸ்வர்யா R. தனுஷ் இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடித்து 2012 ஆம் ஆண்டு வெளியான படம் 3. இந்த படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத்.

 

இந்த படத்தில் அவர் இசையமைத்து தனுஷ் எழுதி, பாடிய ஒய் திஸ் கொலவெறிடி பாடல் அவரை உலகுக்கு அறிமுகப்படுத்தியது. எதிர்பாராதவிதமாக இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் பெரிதும் வரவேற்கப்பட்டது .

 

அதனைத் தொடர்ந்து படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக யூடியூப்பில் அந்த பாடலை வெளியிட நெருப்பு போல் வைரலாக பரவியது. உலகில் பல்வேறு தரப்பினரும் இந்த பாடலை முனுமுனுக்கத் தொடங்கியிருந்தனர்.

 

தற்போது வரை இந்த பாடல் 172 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.
இந்நிலையில் வருண்தேஜ், சாய் பல்லவி நடிப்பில் தெலுங்கில் வெளியான படம் ஃபிடா. இந்த படத்தில் இடம் பெற்ற வச்சந்தே என்ற பாடல் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. மேலும் பாடலில் சாய் பல்லவியின் நடிப்பில் ரசிகர்கள் மயங்கி கிறங்கித் தான் போகினர்.

 

இந்நிலையில் இந்த பாடல் தனுஷின் ஒய் திஸ் கொலவெறி பாடலை பின்னுக்குத் தள்ளி 174 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. மேலும் தென்னிந்தியாவில் அதிக பார்வையாளர்களை பெற்றுள்ள பாடல் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

ஒரே பாடலில் தனுஷை பின்னுக்குத் தள்ளிய சாய் பல்லவி : என்ன பாடல் தெரியுமா? VIDEO