Petta USA All Banner

'தளபதி' ரசிகர்களே தயாராகுங்கள் - முக்கிய அறிவிப்பு

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Atlee - Vijay sports film Thalapathy 63's pooja and shooting update

தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு விஜய் - அட்லி 3 வது முறையாக விளையாட்டை மையமாகக் கொண்ட படத்தில் இணையவுள்ளனர். இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார்.

 

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். மேலும் நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய்யுடன் நடிகர் விவேக் இணைந்து நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்துக்கு மெர்சல் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ஜி.கே.விஷ்ணு இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.

 

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 20 ஆம் தேதி பூஜையும், 21 ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.