தோல்வியை ஒப்புக் கொண்ட பிரபல நடிகர்- ரசிகர்களை ஏமாற்றியதற்கு வருத்தம்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

‘வினய விதேய ராமா’ திரைப்படத்தின் தோல்வியை ஒப்புக் கொண்டு, ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை என நடிகர் ராம் சரண் தேஜா வருத்தம் தெரிவித்துள்ளார்.

Ram Charan admits the failure of his recent flick 'Vinaya Vidheya Rama'

போயபாடி சீனு இயக்கத்தில் ராம் சரண் தேஜா, பிரஷாந்த், சினேகா, கியாரா அத்வானி, விவேக் ஓபராய் உள்ளிட்ட பலரது நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு வெளியான திரைப்படம் ‘வினய விதேய ராமா’.

‘ரங்கஸ்தலம்’ போன்ற சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படத்தை தொடர்ந்து ராம் சரண் நடிப்பில் வெளியான இப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக கடும் பின்னடைவை சந்தித்தது, ராம் சரணின் ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில், ‘வினய விதேய ராமா’ திரைப்படத்தின் தோல்வியை ஒப்புக் கொண்ட ராம் சரண், தனது ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்து கடிதம் வெளியிட்டுள்ளார். அதில், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு வணக்கம். என் மீதும், என் திரைப்படங்களுக்கும் நீங்கள் காட்டும் அன்பையும், ஆதரவையும் பார்க்கும்போது ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன்.

'வினேய விதேய ராமா' படத்துக்காக இரவு பகல் பாராமல் கடினமாக உழைத்த ஒவ்வொரு கலைஞர்களுக்கும் நன்றி. எங்கள் தயாரிப்பாளர் டிவிவி தானய்யா அளித்த ஆதரவு பற்றி கூற வார்த்தைகளே இல்லை. எங்கள் படத்தை நம்பி, ஆதரவு தந்த விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு நான் கடமைப்பட்டுள்ளேன்.

ரசிகர்களான உங்களுக்கு ஒரு பொழுதுபோக்கான படத்தைக் கொடுக்க கடுமையாக உழைத்தோம். துரதிர்ஷ்டவசமாக, எங்கள் நோக்கம் திரையில் சரியாக பிரதிபலிக்கவில்லை. உங்கள் எதிர்பார்ப்புகளை எங்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை.

ஆனால் உங்கள் எல்லையற்ற அன்பும், ஆதரவும் என்றும் என்னை இன்னும் கடினமாக உழைக்க உற்சாகப்படுத்தும். உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் நல்ல படங்களை கொடுக்க உதவும். எப்போதும் தொடர்ந்து ஆதரவளித்து வரும் ஊடகங்களுக்கும் நன்றி’ என தெரிவித்துள்ளார்.