‘பிகிலு சவுண்டு தெறிக்குதே..கொரலு காத கிழிக்குதே..’பீட்டர் பீட்ட ஏத்து வீடியோ பாடல் ரிலீஸ்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

‘மின்சார கனவு’, ‘கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன்’ திரைப்படங்களை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராஜீவ் மேனன் இயக்கத்தில் ‘சர்வம் தாளமயம்’ திரைப்படம் உருவாகியுள்ளது.

Peter Beatu Yethu video song from Sarvam Thaala Mayam released

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ளளார். ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக ‘8 தோட்டாக்கள்’ படத்தில் நடித்த அபர்ணா முரளி நடித்துள்ளார்.

இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில், ரிதத்தை கொண்டாடும் பாடலாக இடம்பெற்றுள்ள ‘பீட்டர் பீட்ட ஏத்து’ பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ள இப்பாடலை ஜி.வி.பிரகாஷ், சத்ய பிரகாஷ், அர்ஜூன் சாண்டி இணைந்து பாடியுள்ளனர்.

'MINDSCREEN சினிமாஸ்' நிறுவனம் சார்பில் லதா தயாரித்துள்ள இப்படத்தில் நெடுமுடி வேணு, குமரவேல், அதிரா, சாந்தா தனஞ்செயன், சுமேஷ், வினித் ஆகியோர்  முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் பிப்ரவரி மாதத்தில் வெளியாகவுள்ளது.

‘பிகிலு சவுண்டு தெறிக்குதே..கொரலு காத கிழிக்குதே..’பீட்டர் பீட்ட ஏத்து வீடியோ பாடல் ரிலீஸ் VIDEO