கார்த்திக்கு ஜோடியாக அறிமுகமாகும் விஜய் தேவரகொண்டாவின் ஹீரோயின்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் கார்த்தி புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

Karthi’s new film ‘K 19’ produced by Dream Warrior

சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கவிருக்கும் கார்த்தியின் 19வது திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளன.

எமோஷன், ஆக்‌ஷன் கலந்த காமெடி திரைப்படமாக உருவாகவிருக்கும் இப்படம், கார்த்தியின் ‘சிறுத்தை’, ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படங்களை போன்று குடும்பமாக ரசிகர்கள் பார்த்து ரசிக்கும்படி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக, தெலுங்கில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்த ரஷ்மிகா மண்டன்னா நடிக்கவிருக்கிறார். விவேக்-மெர்வின் இசையமைக்கும் இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வரும் மார்ச் 2ம் வாரத்தில் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

தற்போது ‘மாநகரம்’ திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தையும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.