Petta USA All Banner

தூக்குதுரையுடனான அனுபவங்களை பகிர்ந்து கொண்ட பிரபல நடிகை

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Kalairani shares her experience with ajith in Viswasam

தமிழ்திரைப்படங்களில் தனது குணச்சித்திர நடிப்பால் மக்களை கவர்ந்தவர் நடிகை கலைராணி. அவர் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பின் போது தல அஜித்துடனான அனுபவங்களை Behindwoods தளத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

 

அதில் அவர் தெரிவித்ததாவது,

இந்த படத்தில் அஜித்துக்கு கால் வலியுடன் நடனமாடிக் கொண்டிருந்தார். இயக்குநர் , டான்ஸ் மாஸ்டர் ஆகியோர் போதும் போதும் என்றாலும் அவர் கேட்கவில்லை. தனக்கு திருப்திகரமாக இருக்கும் வரை ஆடிக் கொண்டிருந்தார். 

 

ஏப்ரல், மே மாதம் தான் படப்பிடிப்பு நடைபெற்றது. கடுமையான வெயில் காலம் என்பதால் நாங்களெல்லாம் குடை பிடித்துக் கொண்டிருந்தோம். ஆனால் அவர் குடைபிடித்து நிற்கவில்லை.

 

எல்லோராலும் வெயிலில் தானே இருக்கிறார்கள். நான் மட்டும் எப்படி குடை பிடிப்பது என்று தவிர்த்துவிட்டார். அதனால் அவர் முகத்தில் சிறு சிறு கரும்புள்ளிகள் ஏற்பட்டது.  

 

படங்கள் பற்றி மட்டுமல்ல. அவர் என்ன டாபிக்னாலும் பேசுவார். ஆஞ்சனேயா படப்பிடிப்பின் போது என்னிடமும் மீரா ஜாஸ்மீனிடமும் அவர் பைக் ரேஸ் அனுபவங்கள் பற்றி கூறினார்.

 

எங்களுக்கு அவரே பிரியாணி செய்து கொடுத்தார். தூக்குதுரையுடனானj 30 நாள்கள் வாழ்ந், உணர்வு கிடைத்தது.

தூக்குதுரையுடனான அனுபவங்களை பகிர்ந்து கொண்ட பிரபல நடிகை VIDEO