Petta USA All Banner

விஸ்வாசம் படத்தை பார்த்தவுடன் அஜித் என்ன சொன்னார் தெரியுமா ? உண்மையை போட்டுடைத்த சிவா

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Siruthai siva reveals thala ajith's reaction about Viswasam

வீரம், வேதாளம், விவேகம் படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக தல அஜித் - சிவா கூட்டணி இணைந்திருக்கும் படம் விஸ்வாசம். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக டி.தியாகராஜன் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். 

 

இந்த படத்திலிருந்து அண்மையில் வெளியான பாடல்கள் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தன. குறிப்பாக டிரெய்லரில் அஜித் பேசும் வசனங்கள் ரசிகர்களுக்கு உற்சாகமளிக்கும் விதமாக அமைந்திருந்தது.

 

இந்நிலையில் சமீபத்தில்  Behindwoods தளத்துக்கு இயக்குநர் சிவா பேட்டியளித்தார். அதில்,   விவேகம் திரைப்படம் முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட படம். அதன் காரணமாக அடுத்த படம் கிராமத்து கதைக்களம் கொண்ட படம் செய்ய வேண்டும் என எங்கள் இருவருக்குமே எண்ணம் இருந்தது.  அதனை அஜித் சார் இந்த மண்ணின் மைந்தன் போல மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்.

 

அஜித்துக்கு காமெடி மிகவும் படிக்கும். நான் விஸ்வாசம் படத்தின் கதையை அவரிடம் தெரிவித்த போது, சிரித்துக் கொண்டே இருந்தார். அது எனக்கு ஒரு எழுத்தாளராக மிகவும் மகிழ்ச்சையைக் கொடுத்தது. 

 

இந்த படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் வெளியேறும் போது குடும்ப உறவுகள் பலப்படும் என எதிர்பார்க்கிறேன்

 

பின்னர் நயன்தாரா நிரஞ்சனா என்ற கதாப்பாத்திரத்தில் இதை விட யாராலும் சிறப்பாக நடிக்க முடியாது என்பது போல சிறப்பாக நடித்திருக்கிறார். 

 

அஜித் சார் படத்தை பார்த்தவுடன் நாம் செய்த நான்கு படங்களிலேயே விஸ்வாசம் தான் பெஸ்ட் என்று தெரிவித்தார்.

விஸ்வாசம் படத்தை பார்த்தவுடன் அஜித் என்ன சொன்னார் தெரியுமா ? உண்மையை போட்டுடைத்த சிவா VIDEO