'இருட்டு அறையில் முரட்டு குத்து' இயக்குநரின் அடுத்த படம் குறித்த சுவாரஸியத் தகவல்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

'ஹர ஹர மஹாதேவகி', 'இருட்டு அறையில் முரட்டு குத்து', என இரண்டு அடல்ட் காமெடி படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் சந்தோஷ் பி ஜெயக்குமார். தமிழில் இந்த வகை ஜானர் படங்கள் குறைவு என்பதால் இந்த படத்துக்கு ஓரளவுக்கு வரவேற்பு இருந்தது.

Iruttu Arayil Murattu kuththu Director Santhosh P jayakumar joins with Gautham Karthik

அதனைத் தொடர்ந்து ஆர்யா, சாயிஷா நடிப்பில் 'கஜினிகாந்த்' என்ற படத்தை இயக்கியிருந்தார். தற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை தெலுங்கில் இயக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இயக்குநர்  சந்தோஷ் பி.ஜெயக்குமார், கௌதம் கார்த்திக்குடன் மூன்றாவது முறையாக இணையவுள்ளார்.  தீமை தான் வெல்லும் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

இந்த படத்துக்கு டி. இமான் இசையமைக்கவுள்ளார். திரில்லர் பாணியில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்துக்கு ஹீரோயின் இல்லை எனவும் கூறப்படுகிறது.