ஜெயம் ரவியின் குடும்ப காமெடி படத்துக்கு ரசிகர்களிடம் தலைப்பு கேட்கும் இயக்குநர்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

'அடங்க மறு' படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து ஜெயம் ரவி தற்போது புதுமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

Director Pradeep Ranganathan asks to fans Title of Jayam Ravi's new film

இந்த படத்துக்கு இசையமைப்பாளராக ஹிப்ஹாப் ஆதி ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக காஜல் அக்வால் நடிக்கிறார்.  மேலும் கே,எஸ்.ரவிக்குமார், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இன்னும் இந்த படத்துக்கு பெயரிடப்படவில்லை. இந்நிலையில் இந்த படத்தின் இயக்குநர் பிரதீப் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், ஜெயம்ரவியின் காமெடி மற்றும் குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகி வரும் படத்துக்கு ஒரு தலைப்பு சொல்லுங்கள் என ரசிகர்களிடம் கேட்டுள்ளார்.