யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் படத்தில் களமிறங்கும் பிக்பாஸ் நடிகை

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரும்பாலான படங்களில் யோகி பாபு இருக்கிறார். அவரது காமெடிக் காட்சிகளுக்கு தியேட்டரே அதிர்கிறது. அவர் தற்போது சில படங்களில் முதன்மை வேடங்களில் நடித்துவருகிறார்.

Bigboss fame Janani plays important role in Actor Yogi babu's Dharmaprabhu

சாம் ஆண்டன் இயக்கத்தில் அவர் முதன்மை வேடத்தில் நடிக்கும் 'கூர்கா' படத்தின் படப்பிடிப்பு நேற்றோடு நிறைவடைந்தது. தற்போது அவர் 'தர்மபிரபு' என்ற படத்தில் நடித்துவருகிறார்.

இந்த படத்தை விமல் - வரலக்ஷ்மி நடித்துள்ள 'கன்னிராசி' படத்தின இயக்குநர் முத்துகுமரன் இயக்குகிறார். இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். மேலும், இந்த படத்துக்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய, சான் லோகேஷ் படத்தொகுப்பு செய்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் ஜனனி ஐயர் சிறப்பு வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.